பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 19, 2007
இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சுமார் 100 புள்ளிகள் உயர்ந்தது. ஐசிஐசிஐ, பார்தி, விப்ரோ ஆகிய பங்குகள் உயர்ந்தன.
இந்த வாரம் சந்தையில் சிறிது தடுமாற்றம் இருக்கும். F&O expiry இந்த வாரம் இருக்கும் என்பதால் சந்தையில் ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி காணப்படும்.
பார்மா (Pharma) பங்குகள் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக ரான்பேக்சி அமெரிக்க அலுவலகங்களில் நடந்த ரெய்ட் ரான்பேக்சி பங்குகளை கடுமையாக சரிவடைய செய்யும். F&O சந்தையில் ராம்பேக்சி பங்குகளை விற்கலாம். இது 370க்கு சரியலாம்
விப்ரோ மற்றும் பிற டெக்னாலஜி பங்குகள் உயரும் வாய்ப்புகள் உள்ளது
இந்த வாரம் சந்தை சூழ்நிலை குறித்து நிச்சயமாக கூற இயலாது என்றாலும், தற்போதைய சூழலில் சந்தையில் உயர்வு காணப்படுகிறது. அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் நல்ல உயர்வுடன் காணப்பட்டாலும், வெள்ளியன்று பெரிய உயர்வோ, சரிவோ இல்லாமல் தான் வர்த்தகம் நிறைவுற்றது. பிற ஆசிய பங்குச்சந்தைகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.
கச்சா எண்ணெய் பேரல் $59க்கு வந்துள்ளது. டாலர் – ரூபாய் பரிமாற்றம் ரூ44.07 என்ற அளவில் உள்ளது


.... இங்கே பதியப்பட்டது Indian Markets, பங்குச்சந்தை செய்தி | 1 மறுமொழி »
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 16, 2007
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கட்டுமானத் துறை தற்பொழுது வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் கட்டுமான துறை சுமார் 14.3 அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இது தவிர மைக்ரோசாப்ட் விஸ்டாவின் வருவாய் பங்குச்சந்தை எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதால் மைக்ரோசாப்ட் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன
இந்தக் காரணங்களால் தடுமாறிக்கொண்டிருந்த Dow இறுதியாக 3 புள்ளிகள் உயர்வுடன் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று நிறைவு பெற்றது
Dow Ends Up 3 at 12,768, Nasdaq Ends Down 1 at 2,496 Due to Slide in Housing Starts


.... இங்கே பதியப்பட்டது US Markets, அமெரிக்க சந்தை, பங்குச்சந்தை செய்தி | 1 மறுமொழி »
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 16, 2007
கடந்த மூன்று நாட்களாக சுமார் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த Dow Jones இன்று சரிந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கட்டுமானத் துறை தற்பொழுது வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் கட்டுமான துறை சுமார் 14.3 அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இது தவிர மைக்ரோசாப்ட் விஸ்டாவின் வருவாய் பங்குச்சந்தை எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதால் மைக்ரோசாப்ட் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன
In midday trading, the Dow fell 15.22, or 0.12 percent, to 12,749.79

.... இங்கே பதியப்பட்டது US Markets, அமெரிக்க சந்தை | Leave a Comment »
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 16, 2007
பங்குச்சந்தையில் தீவிரவாதிகள் வர்த்தகம் செய்வதாக எம்.கே.நாராயணன் கூறியதை பங்குச்சந்தையை தீவிரவாதிகள் manipulate செய்வதாக பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தின.
பங்குச்சந்தையை manipulate செய்யும் அளவுக்கு தீவிரவாதிகளிடம் பணம் இருக்கிறதா என்பதும் பங்குச்சந்தையில் சதி செய்ய பணம் தவிர பங்குச்சந்தை குறித்த விபரமான அறிவு தேவை என்பதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் இந்த பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியப் பங்குச்சந்தையின் வளர்ச்சி பெரும்பாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களாலேயே (FII) உயர்ந்துள்ளது. தீவிரவாதிகளும் இதில் முதலீடு செய்து லாபம் அடைகிறார்கள் என்பதே எம்.கே.நாராயணன் அவர்களின் கருத்து. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்
.... இங்கே பதியப்பட்டது Indian Markets, Stock Market, பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 15, 2007
சன் டிவிக்கு அடுத்து ராஜ் டிவி பங்குகளை வெளியிட்டு உள்ளது.
IPO விபரம்
91 கோடி ரூபாயை இந்த IPO மூலம் திரட்ட ராஜ் டிவி முயலுகிறது. 10 ரூபாயை முகப்பு விலையாக கொண்ட சுமார் 35லட்சம் பங்குகளை இந்த IPO மூலம் ராஜ் டிவி வெளியிடுகிறது. 10 ரூபாயை முகப்பு விலையாக கொண்ட ஒரு பங்கின் சந்தை விலை Book Building process மூலம் நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சமாக ரூபாய் 257, குறைந்தபட்சம் 221 என்ற வரையறைக்குள் பங்குகளின் விலை நிர்ணயம் செய்யப்படும்.
ராஜ் டிவி பங்குகளை வாங்கலாமா ?
ராஜ் டிவியின் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து.
ஏன் வாங்க கூடாது ?
ராஜ் டிவி தமிழில் மூன்றாவது பெரிய தொலைக்காட்சி நிறுவனம் என்ற போதிலும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது. இரண்டாவது பெரிய நிறுவனம் என்ற தன்னுடைய இடத்தை இழந்ததோடு மட்டுமில்லாமல் மூன்றாவது என்ற இடத்திற்கு கூட ஜெயா டிவி போன்ற நிறுவனங்களால் போட்டியை எதிர்கொண்டுள்ளது. ராஜ் டிவி மற்றும் ராஜ் டிஜிட்டல் என்ற இரண்டு சேனல்களில் ராஜ் தனது ஒளிபரப்பை செய்து வருகிறது. இந்த இரண்டு சேனல்கள் மூலமே ராஜ் டிவிக்கு லாபம் வருகிறது. அதன் மற்றொரு தெலுங்கு சேனலான Vissa TV நஷ்டத்தில் இயங்குவதாக ராஜ் டிவியின் RED HERRING PROSPECTUS தெரிவிக்கிறது. இதன் கடந்த ஆண்டு லாபம் (Profit After Tax) சுமார் 3.81 கோடி ஆகும். ராஜ் டிவியின் இந்த லாபம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவு. இதே காலகட்டத்தில் சன் டிவியின் லாபம் சுமார் 128.80 கோடி ரூபாய்.
சன் டிவி நிறுவனப் பங்குகளை, ராஜ் டிவியுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. சன் டிவியின் லாபம் ராஜ் டிவியை விட பல மடங்கு அதிகம் என்பது தவிர சன் டிவி நிறுவனம் பல்வேறு மொழிகளில் சேனல்களை லாபத்துடன் இயக்குகிறது. இது தவிர கேபிள், DTH என பல்வேறு துறைகளிலும் லாபகரமாக செயல்பட்டு வருகிறது.
சன் டிவியின் பங்குகளை தொடர்ந்து ராஜ் டிவி என்பது முதலீட்டாளர்களை ஈர்த்தாலும் ராஜ் டிவியின் அடிப்படையில் பெரிய வளர்ச்சி இருக்கும் வாய்ப்புகள் இல்லை.
ராஜ் டிவியின் எதிர்கால திட்டம் என்ன ?
ராஜ் டிவி தன்னுடைய எதிர்கால திட்டங்களாக கீழ்கண்டவைகளை தெரிவிக்கிறது. இந்த எதிர்கால திட்டங்களுக்கு நிதி திரட்டவே ராஜ் டிவி பங்குகளை வெளியிடுகிறது.
- Strengthen Production facilities, enhancing content and content acquisition
Launching a new Television Channel.
Broadcast of existing Channels in the International Market.
To produce Short-films/ Tele-films.
Acquisition and Export of films in international market.
To construct new studio premises.
To finance general corporate purposes.
To meet the issue expenses.
இதில் லாபத்தை பெருக்கும் திட்டங்களான புதிய தொலைக்காட்சி சேனல், வெளிநாட்டு தமிழர்களிடம் ராஜ் டிவியை கொண்டு செல்வது, தொலைக்காட்சி படங்களை உருவாக்குவது போன்றவை பெரிய லாபங்களை தந்து விடாது என்பதால் ராஜ் டிவியின் எதிர்கால வளர்ச்சி குறித்து சில சந்தேகங்கள் எழுகின்றன.
பங்குச்சந்தை தளத்தின் கருத்து
இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் பல பங்குகள் அதிக அளவில் லாபத்தை பெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் ராஜ் டிவி பங்குகளில் முதலீடு செய்வது பெரிய லாபத்தை கொடுக்காது. வேறு நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாம்.
.... இங்கே பதியப்பட்டது IPO review, Indian Markets, Stock Market, டிப்ஸ், பங்குச்சந்தை அலசல் | 7 மறுமொழிகள் »
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 15, 2007
மும்பை பங்குச்சந்தை குறியீடு (BSE) இன்று சுமார் 346 புள்ளிகள் உயர்வைப் பெற்று 14,373 புள்ளிகளை எட்டியது. சத்யம், விப்ரோ, இன்போசிஸ் போன்ற ஐ.டி. பங்குகளும், நேற்று கடுமையாக சரிந்த வங்கிப் பங்குகளும் இன்று உயர்ந்தன.
உலகப் பங்குச்சந்தையில் நிலவிய உயர்வு பங்குச்சந்தைக்கு நல்ல பாசிட்டிவ் செண்டிமெண்ட்டை கொடுத்தது. பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கு ஆர்வம் முதலீட்டாளர்களிடம் காணப்பட்டது
.... இங்கே பதியப்பட்டது பங்குச்சந்தை செய்தி | Leave a Comment »
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 15, 2007
பெட்ரோல், டீசல் விலை குறைவு
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசு முறையே ரூ2 மற்றும் ரூ1 ஆக குறைத்துள்ளது. இதையடுத்து பெட்ரோலின் விலை சென்னையில் 47.51ரூபாயாகவும், டீசலின் விலை 33.22 ரூபாயாகவும் இருக்கும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் HPCL, BPCL போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் பங்குச்சந்தையில் இந்தப் பங்குகள் சரிந்தன.
தொடர்ந்து உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பணவீக்கம் இந்த வாரம் 6.73% எட்டியது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயருவது பங்குச்சந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் நேற்று பங்குச்சந்தை 346 புள்ளிகள் உயர்ந்தது. உலக அளவில் பல்வேறு பங்குச்சந்தைகள் உயர்ந்த சூழலில் இந்தியப் பங்குசந்தைகளும் உயர்ந்தன.
.... இங்கே பதியப்பட்டது Indian Markets, Stock Market, பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | 1 மறுமொழி »
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 15, 2007
தீவிரவாத இயக்கங்களுக்கு பங்குச்சந்தை மூலம் பணம் கிடைப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக மும்பை மற்றும் சென்னை பங்குச்சந்தையில் இவர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் நாராயணன் கூறியிருக்கிறார்.
மும்பை பங்குச்சந்தையை குறிப்பிடும் அதே நேரத்தில், சென்னை பங்குச்சந்தையை நாராயணன் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பங்குச்சந்தையில் அதிக அளவு வர்த்தகம் நடப்பதில்லை. சென்னை பங்குச்சந்தையை நாராயணன் குறிப்பிட்டுள்ளது விடுதலைப் புலிகளை குறித்து தான் இருக்க முடியும் என்று தெரிகிறது. விடுதலைப் புலிகள் பல நிறுவனங்களை நடத்துவதாகவும், அதில் பங்குச்சந்தை வர்த்தகமும் ஒன்று என நாராயணன் கூறியுள்ளார்
விடுதலைப் புலிகளின் இந்த முறையை ஜிகாதி இயக்கங்களும் கடைபிடிக்க தொடங்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்
எம்.கே.நாராயணன் விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது
.... இங்கே பதியப்பட்டது பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 15, 2007
ரிசர்வ் வங்கி CRRஐ உயர்த்தியவுடன் வங்கிகளும் தங்கள் வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கி உள்ளன. பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் தேசிய வங்கி போன்ற வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன
http://www.thehindubusinessline.com/2007/02/15/stories/2007021506590100.htm
.... இங்கே பதியப்பட்டது வணிகச்செய்திகள் | 2 மறுமொழிகள் »
பதிந்தவர் பங்குச்சந்தை மேல் பெப்ரவரி 14, 2007
பணவீக்கம் பங்குச்சந்தையை பாதிக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு வட்டி விகிதங்களை உயர்த்த தொடங்கி இருக்கிறது. இதனால் வங்கி சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு கடன்பத்திரங்களைச் சார்ந்த (Debt Instruments) முதலீடுகள் அதிக பலனை கொடுக்ககூடும். இதனால் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் சற்றே குறைந்து இத்தகைய கடன்பத்திரங்களை நோக்கி நகரும். இது சந்தைக்கு சரிவை ஏற்படுத்தக் கூடும்
.... இங்கே பதியப்பட்டது பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | Leave a Comment »