தமிழில் பங்குச்சந்தை

பங்குச்சந்தை செய்திகள், அலசல்கள், வாய்ப்புகள், உயர்வு, சரிவு….

Archive for ஜூலை, 2007

சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் சரிவு : ஊதிய உயர்வு பாதிப்படையுமா ?

Posted by பங்குச்சந்தை மேல் ஜூலை 11, 2007

ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளது. இன்று தனது வருவாய் அறிக்கையை சமர்ப்பித்த இன்போசிஸ் நிறுவனம், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் தனது லாபம் 8.5% சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இதன் லாபம் 27.7% அதிகரித்துள்ளது.

ரூபாய் உயர்ந்துள்ளதால் தனது லாபம் 287 கோடி வீழ்ச்சி அடைந்துள்ளதாக அந் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பெருகி வரும் ஊழியர்களின் சம்பளம், ரூபாயின் மதிப்பு உயருவது போன்ற நெருக்கடிகளால் சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது Billing ரேட்டினை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கருதப்படுகிறது.

தற்போதைய அளவில் ஊழியர்களின் சம்பளம் பாதிப்படையாது. ஆனால் இதே நிலை நீடித்தால் சம்பள உயர்வு மற்றும் சம்பள விகிதத்தில் சரிவு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது

இன்போசிஸ் பங்கு இன்று சுமார் 90 ரூபாய் சரிவடைந்தது. பெரும்பாலான சப்ட்வேர் பங்குகள் கடும் சரிவடைந்தன. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை இன்று சுமார் 100 புள்ளிகள் சரிவடைந்து 14910 என்ற நிலையில் உள்ளது

Advertisements

Posted in பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள், Indian Markets, Rupee | Leave a Comment »

சரியும் அமெரிக்க பொருளாதாரம் : அலறும் பங்குச்சந்தைகள்…

Posted by பங்குச்சந்தை மேல் ஜூலை 10, 2007

இன்று அமெரிக்க பங்குச்சந்தைகள் கடும் சரிவு அடைந்தன. அதன் எதிரொலி தற்பொழுது ஆசியப் பங்குச்சந்தைகளிலும் கேட்கிறது. அமெரிக்க பங்குச்சந்தையின் Dow Jones Industrial Average 148 புள்ளிகள் சரிவடைந்தது.

இதையடுத்து சற்றுமுன் வர்த்தகம் ஆரம்பித்த ஆசியப் பங்குச்சந்தைகளிலும் இது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. ஜப்பானின் Nikkei 225 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா பங்குச்சந்தைகளும் சரிவடைந்துள்ளன

இந்தச் சரிவிற்கு காரணம் என்ன ?

அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்தொழில் (Housing Sector) கடும் வீழ்ச்சியினை எதிர்கொண்டுள்ளது. இன்று தனது வருவாய் அறிக்கையினை சமர்பித்த அமெரிக்காவின் மிகப்பெரிய கட்டுமானப் பொருள் விற்பனை நிறுவனமான ஹோம் டிப்போட் ( Home-improvement retailer Home Depot), தன்னுடைய வருவாய் 2007ம் ஆண்டு வீழ்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கட்டுமானத்துறை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் தனது லாபத்திலும் வீழ்ச்சி இருக்கும் என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தவிர மதிப்பீட்டு நிறுவனமான (Rating Agency) Standard & Poor’s அமெரிக்காவின் வீட்டுக்கடன் பத்திரங்களான subprime residential mortgage-backed securities (RMBS) பலவற்றின் ரேட்டிங் சரியாக செய்யப்படவில்லை என்றும் $12 billion மதிப்புள்ள பத்திரங்களின் ரேட்டிங் குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இது வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடும். இது ஏற்கனவே கடும் வீழ்ச்சியை
எதிர்கொண்டுள்ள கட்டுமானத்தொழிலை மேலும் வீழ்ச்சி அடையச் செய்யும். அமெரிக்க பொருளாதாரமும் கடுமையாக பாதிப்படையும்.

கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு $73 என்ற நிலையை எட்டியது

இந்தக் காரணங்களே பங்குச்சந்தையை வீழ்ச்சி அடைய வைத்தன

***

இந்தியப் பங்குச்சந்தையிலும் இது எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இன்போசிஸ் தனது வருவாய் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், இன்போசிஸின் வருவாய் குறையும் என தெரிகிறது

Posted in அமெரிக்க சந்தை, US Markets | Leave a Comment »

இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் ?

Posted by பங்குச்சந்தை மேல் ஜூலை 10, 2007

இந்திய ரூபாய் டாலர் இடையேயான பறிமாற்ற நிலை இன்று 40.3725 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத கடும் உயர்வு ஆகும்

இந்தியாவிற்கு அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகள்/செலவாணி வந்து கொண்டிருக்கும் நிலையில் அதிகளவில் டாலருக்கான தேவை இல்லாததால் ரூபாய் கடந்த சில மாதங்களாக கடும் உயர்வை பெற்று வருகிறது

இந்தியாவிற்கு பணம் அனுப்பாமால் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் ? உடனே அனுப்பி விடுங்கள். பெரிய அளவில் ரூபாய் சரிவதற்கான வாய்ப்புகள் இல்லை

Posted in வணிகச்செய்திகள், Indian Markets, Rupee | 15 Comments »

மும்பை பங்குச்சந்தை 2020 ஆண்டில் 50,000 புள்ளிகளை எட்டும்

Posted by பங்குச்சந்தை மேல் ஜூலை 8, 2007

மும்பை பங்குச்சந்தையின் குறியீடு கடந்த வாரம் 15,000 புள்ளிகளை எட்டியது. இதையடுத்து மும்பையின் பங்குச்சந்தை குறியீடு 50,000 புள்ளிகளை எட்டும் என அமெரிக்க பங்குத்தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கூறியுள்ளது

Sensex hits 15000

Posted in பங்குச்சந்தை செய்தி, Indian Markets | 3 Comments »