தமிழில் பங்குச்சந்தை

பங்குச்சந்தை செய்திகள், அலசல்கள், வாய்ப்புகள், உயர்வு, சரிவு….

இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் ?

Posted by பங்குச்சந்தை மேல் ஜூலை 10, 2007

இந்திய ரூபாய் டாலர் இடையேயான பறிமாற்ற நிலை இன்று 40.3725 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத கடும் உயர்வு ஆகும்

இந்தியாவிற்கு அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகள்/செலவாணி வந்து கொண்டிருக்கும் நிலையில் அதிகளவில் டாலருக்கான தேவை இல்லாததால் ரூபாய் கடந்த சில மாதங்களாக கடும் உயர்வை பெற்று வருகிறது

இந்தியாவிற்கு பணம் அனுப்பாமால் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் ? உடனே அனுப்பி விடுங்கள். பெரிய அளவில் ரூபாய் சரிவதற்கான வாய்ப்புகள் இல்லை

Advertisements

15 பதில்கள் to “இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் ?”

 1. நிரந்தரமாக ‘வாய்ப்பில்லையா’? இல்ல இன்னும் 2 வருசத்துல சரியாயிருமா?

 2. Alex,

  It depends on the economy, so we can’t say that it will not get corrected in 2 years

  US economy is slowing down. Euro has hit an all time high against dollar today – $1.37. Analysts are speculating that Euro may raise to $2.50 or even $3 in the next 2 years. Dollar is also falling against Yen

  So, chances of Indian Rupee depreciating is very thin now

  But RBI may not allow rupee to appreciate beyond 40 which will be very bad for indian exporters. But you never know… if the Oil prices increase, RBI may allow Indian Rupee to appreciate

  (Excuse me for replying in English)

 3. Sathia said

  டாலர் சரிவதற்கு அனுமதிப்பதே இன்னும் அதிகம் ஏற்றுமதிப்போட்டிக்காகத்தானே. அதாவது சந்தையில் யூரோ அதிக விலையிலும் டாலர் மலிவாகவும் இருக்கும்பட்சத்தில் டாலரில் பொருட்கள் வாங்கினால் லாபமாக இருப்பதால் அமரிக்க ஏற்றுமதி பெருகும். இதனால் அமரிக்க பொருளாதாரம் இன்னும் ஏற்றமடையும் அல்லவா? Slowing down trend should be for a very short period is my opinion. இன்னும் வட்டி விகிதம் ஏறவே வாய்ப்பிருக்கிறது அதனால் உள்ளூர் சேமிப்பும் அதிகமாவதால் டாலர் பலம் பெறவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் உடனடியாக அல்ல. இன்னும் 2 வருடத்தில் மறுபடியும் ரூபாய் சரிவை சந்திக்கும்.

 4. Sathia,

  US Exports will be cheaper compared to UK Exports as the Dollar is declining. But that is not the reason for the current decline in Dollar. Dollar is facing downtrend due to economic factors such as slowing down US Economy, slow down in the housing sector etc.,

  After 2 years we can’t say that the Indian Rupees will Decline, because Indian Economy is also growing. Money is flowing into the Country.

  Again… these are all speculation. But we should be prepared for further Rupee Appreciation in the short term

 5. […] இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் … இந்திய ரூபாய் டாலர் இடையேயான பறிமாற்ற நிலை இ […] […]

 6. வர்த்தகம் said..
  // பெரிய அளவில் ரூபாய் சரிவதற்கான வாய்ப்புகள் இல்லை //

  சிறில் said…

  // நிரந்தரமாக ‘வாய்ப்பில்லையா’? இல்ல இன்னும் 2 வருசத்துல சரியாயிருமா?//

  சிறில்,
  இதைச் சொல்லும்போது உங்களுக்கு குற்ற உணர்வு இல்லை?

  ரூபாய் சரிய வேண்டும் என்று எண்ணுவது உங்களின் சுய இலாபதிற்குத்தானே? :-(((

  வர்த்தகம்,
  இந்தியாவின் ரூபாய் மதிப்பு கூடும்போது பணவீக்கம் குறைய வேண்டுமே? நடக்கிறதா?

 7. கல்வெட்டு,

  இந்தியாவின் ரூபாய் மதிப்பு கூடும்போது பணவீக்கம் குறைய வேண்டுமே? நடக்கிறதா?

  ****

  இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தான் ரூபாய் உயர்ந்தாலும் அதனை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. கடந்த காலங்களில் டாலர் சரியும் பொழுது ரிசர்வ் வங்கி டாலரை வாங்கும். அதனால் டாலருக்கு தேவை ஏற்பட்டு டாலர் சரியாமலும், ரூபாய் அதிகம் உயராமலும் இருந்து வந்தது. அதாவது ரூபாய் உயர்வதை கட்டுப்படுத்தி வைத்திருந்தது ரிசர்வ் வங்கி.

  ஆனால் கச்சா எண்ணெய் உயர்வதாலும், பிற பொருட்களின் விலை உயர்வதாலும் பணவீக்கம் அதிகரித்ததால் ரூபாய் உயர்வதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் 1 டாலருக்கு 40ரூபாய் என்றளவுக்கு மேலே செல்லாமல் ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்பது நிச்சயம்.

  அப்புறம் நான் வர்த்தகம் அல்ல…பங்குச்சந்தை 🙂

  வர்த்தகம் எழுதுவது வேறு ஒரு நண்பர்

  ****

  இதைச் சொல்லும்போது உங்களுக்கு குற்ற உணர்வு இல்லை?

  ரூபாய் சரிய வேண்டும் என்று எண்ணுவது உங்களின் சுய இலாபதிற்குத்தானே? :-(((

  ****

  இதில் என்ன குற்ற உணர்ச்சி வேண்டிக்கிடக்கிறது 🙂
  எல்லாவற்றிலும் நாட்டுப்பற்றையும், தேசபக்தியையும் புகுத்த தேவையில்லை. ஒரு அளவுக்கு மேல் ரூபாய் உயர்வது இந்திய பொருளாதாரத்திற்கு கூட நல்லதில்லை. ஏனெனில் இந்திய ஏற்றுமதிக்கு பெரிய மதிப்பு இருக்காது

 8. SurveySan said

  ஸ்டாக் இன் டமில்,
  ஜோசியம் சொல்ற மாதிரி ஒரு வரீல மேட்டர சொல்லாம, விலாவாரியா ‘ஏன்னு’ சொல்லலாமே.
  😦

 9. //அப்புறம் நான் வர்த்தகம் அல்ல…பங்குச்சந்தை //

  மன்னிக்க :-))

  //இதில் என்ன குற்ற உணர்ச்சி வேண்டிக்கிடக்கிறது //
  //எல்லாவற்றிலும் நாட்டுப்பற்றையும், தேசபக்தியையும் புகுத்த தேவையில்லை. //

  குற்ற உணர்ச்சி எதில் வேண்டும்? எதில் தானாக வரும் என்பது அவரவர் கொள்கை, அவர்களின் சுய மதிப்பீடு சார்ந்த விசயம்.
  இந்தியாவின் ரூபாய் மதிப்பு எப்பொழுது குறையும் என்று காத்து இருப்பவர்களும்,வெளிநாட்டு வருமானத்திற்கு வரி இல்லை என்ற போதும் இன்னும் ஹவாலாவாக மாற்றிக் கொண்டு இருப்பவர்களும் அவரவரின் உணர்ச்சிகளை சுய மதிப்பீடு செய்து கொள்ளட்டும்.

  நான் தேசப் பற்றை கேள்வி கேட்கவில்லை. ஆனால் ஒரு தேசம் நாசமாய்ப் போகட்டும் என்று எண்ணுவது தவறு.
  அதிக மதிப்பை எட்டிய கரன்ஸிகளை உடைய நாடுகள் ஒன்றும் பிச்சைக்கார நாடுகள் இல்லை.அவர்களின் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. இன்னும் 1 cent ம் 10 fils ம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறது.பைசாதான் அழிந்துவிட்டது பணவீக்கத்தால்.

  எனக்கு புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கும் பொருளாதாரம் தெரியாது. ஆனால் பணவீக்கத்தால் அழியும் சில வாழ்க்கைகள் தெரியும் என்றே நினைக்கிறேன்.

  பொருளாதாரப் புலி மன்மோகனுக்கே இந்த விசயம் இப்போதுதான் புரிந்துள்ளது. அவர் சமீபத்தில் CII இல் பேசியது தெரியும் தானே?

  //இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தான் ரூபாய் உயர்ந்தாலும் அதனை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.//

  :-((

  உங்களைப் பொறுத்தவரை இந்தியாவின் பணவீக்கம் உயர்ந்தாலும் ரிசர்வ் வங்கி சும்மா இருக்க வேண்டும். அதை கட்டுப்படுத்தக்கூடாது…இல்லையா?
  பணவீக்கத்தால் பாதிக்கப்படுவது பங்குகளில் முதலீடு செய்யும் கனவான்கள் அல்ல. பணவீக்கம் எப்படி இருந்தாலும் இந்திய ரூபாய் சரிந்தால் சரி என்று எண்ணுபவர்களிடம் என்ன பேசுவது :-((

  //ஒரு அளவுக்கு மேல் ரூபாய் உயர்வது இந்திய பொருளாதாரத்திற்கு கூட நல்லதில்லை. ஏனெனில் இந்திய ஏற்றுமதிக்கு பெரிய மதிப்பு இருக்காது //

  ஆம் , இந்திய பொருளாதாரம் இப்படி அல்லக்கையகவே இருக்கும் வரை.அதனால்தான் $$ கிடைக்கிறது என்று அரிசிக்குப்பதில் மூங்கில் போட விவசாயி தூண்டப்படுகிறான்…அவன் தின்பது எலிக்கறியாகவே இருந்தாலும். :-((

  பண வீக்கம் குறைந்து ஒரு சாதாரண மனிதன் தான் வாங்கும் சம்பளத்தில்/வருமானத்தில் குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டால் அது நல்லது என்று நினைக்கிறேன். அதற்கு ரூபாயின் மதிப்பு கூட வேண்டும்.

 10. வண்டிக்காரன் said

  பணமதிப்பு உயர்வதால் சாமானியருக்கு எந்த பலனும் கிடைப்பதில்லையே. நாங்கள் உலக வர்த்தகம் செய்வதில்லை. நாடார் கடையில் பொருள் வாங்க போனால் பணம் பத்தலை. விலை அப்படியேதான் இருக்கு. எம் பையன் அனுப்புற வெளிநாட்டு பணத்துக்கு இன்னும் கொஞ்சம் உள்ளூர் பணம் கிடைச்சா சமாளிச்சுருவோம்ல…

 11. selva said

  //இதைச் சொல்லும்போது உங்களுக்கு குற்ற உணர்வு இல்லை?

  ரூபாய் சரிய வேண்டும் என்று எண்ணுவது உங்களின் சுய இலாபதிற்குத்தானே? :-(((
  //

  Good joke. These people have to really study economics very seriously to avoid these stupid statements. Peak of emotions…!

 12. selva said

  //இதைச் சொல்லும்போது உங்களுக்கு குற்ற உணர்வு இல்லை?

  ரூபாய் சரிய வேண்டும் என்று எண்ணுவது உங்களின் சுய இலாபதிற்குத்தானே? :-(((
  //

  Good joke. These people really have to study economics seriously to avoid these idiotic statements. Peak of emotional stupidity.

 13. Rs Vs $$$ யார் எக்கேடு கெட்டால் என்ன?
  http://kalvetu.blogspot.com/2007/07/rs-vs.html

 14. ஸ்டாக் இன் டமில்,
  ஜோசியம் சொல்ற மாதிரி ஒரு வரீல மேட்டர சொல்லாம, விலாவாரியா ‘ஏன்னு’ சொல்லலாமே.

  ****

  பின்னூட்டங்களையும் படியுங்கள் ஐயா 🙂
  எவ்வளவு நல்ல விவாதங்கள் நடக்கின்றன

 15. //selva Says:
  Good joke. These people have to really study economics very seriously to avoid these stupid statements. Peak of emotions…! //

  :-))

  நன்றி செல்வா

  பிணம் எப்போது விழும் என்று காத்து இருக்கும் மயான தொழிலாலியின் காத்திருப்பில் இருக்கும் “வயிற்றுப்பாட்டு நியாயம்” ஏற்றுக் கொள்ளத்தக்கது. இந்தியாவின் ரூபாய் எப்போது வீழ்ச்சி அடையும் என்று காத்திருப்பவர்களின் நியாயம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை மன்னிக்க.

  1$ இன் மதிப்பு Rs 1000/- ஆக உயர்ந்து பொருளாதாரம் முன்னேறட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: