சன் டிவிக்கு அடுத்து ராஜ் டிவி பங்குகளை வெளியிட்டு உள்ளது.
IPO விபரம்
91 கோடி ரூபாயை இந்த IPO மூலம் திரட்ட ராஜ் டிவி முயலுகிறது. 10 ரூபாயை முகப்பு விலையாக கொண்ட சுமார் 35லட்சம் பங்குகளை இந்த IPO மூலம் ராஜ் டிவி வெளியிடுகிறது. 10 ரூபாயை முகப்பு விலையாக கொண்ட ஒரு பங்கின் சந்தை விலை Book Building process மூலம் நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சமாக ரூபாய் 257, குறைந்தபட்சம் 221 என்ற வரையறைக்குள் பங்குகளின் விலை நிர்ணயம் செய்யப்படும்.
ராஜ் டிவி பங்குகளை வாங்கலாமா ?
ராஜ் டிவியின் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து.
ஏன் வாங்க கூடாது ?
ராஜ் டிவி தமிழில் மூன்றாவது பெரிய தொலைக்காட்சி நிறுவனம் என்ற போதிலும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது. இரண்டாவது பெரிய நிறுவனம் என்ற தன்னுடைய இடத்தை இழந்ததோடு மட்டுமில்லாமல் மூன்றாவது என்ற இடத்திற்கு கூட ஜெயா டிவி போன்ற நிறுவனங்களால் போட்டியை எதிர்கொண்டுள்ளது. ராஜ் டிவி மற்றும் ராஜ் டிஜிட்டல் என்ற இரண்டு சேனல்களில் ராஜ் தனது ஒளிபரப்பை செய்து வருகிறது. இந்த இரண்டு சேனல்கள் மூலமே ராஜ் டிவிக்கு லாபம் வருகிறது. அதன் மற்றொரு தெலுங்கு சேனலான Vissa TV நஷ்டத்தில் இயங்குவதாக ராஜ் டிவியின் RED HERRING PROSPECTUS தெரிவிக்கிறது. இதன் கடந்த ஆண்டு லாபம் (Profit After Tax) சுமார் 3.81 கோடி ஆகும். ராஜ் டிவியின் இந்த லாபம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவு. இதே காலகட்டத்தில் சன் டிவியின் லாபம் சுமார் 128.80 கோடி ரூபாய்.
சன் டிவி நிறுவனப் பங்குகளை, ராஜ் டிவியுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. சன் டிவியின் லாபம் ராஜ் டிவியை விட பல மடங்கு அதிகம் என்பது தவிர சன் டிவி நிறுவனம் பல்வேறு மொழிகளில் சேனல்களை லாபத்துடன் இயக்குகிறது. இது தவிர கேபிள், DTH என பல்வேறு துறைகளிலும் லாபகரமாக செயல்பட்டு வருகிறது.
சன் டிவியின் பங்குகளை தொடர்ந்து ராஜ் டிவி என்பது முதலீட்டாளர்களை ஈர்த்தாலும் ராஜ் டிவியின் அடிப்படையில் பெரிய வளர்ச்சி இருக்கும் வாய்ப்புகள் இல்லை.
ராஜ் டிவியின் எதிர்கால திட்டம் என்ன ?
ராஜ் டிவி தன்னுடைய எதிர்கால திட்டங்களாக கீழ்கண்டவைகளை தெரிவிக்கிறது. இந்த எதிர்கால திட்டங்களுக்கு நிதி திரட்டவே ராஜ் டிவி பங்குகளை வெளியிடுகிறது.
- Strengthen Production facilities, enhancing content and content acquisition
Launching a new Television Channel.
Broadcast of existing Channels in the International Market.
To produce Short-films/ Tele-films.
Acquisition and Export of films in international market.
To construct new studio premises.
To finance general corporate purposes.
To meet the issue expenses.
இதில் லாபத்தை பெருக்கும் திட்டங்களான புதிய தொலைக்காட்சி சேனல், வெளிநாட்டு தமிழர்களிடம் ராஜ் டிவியை கொண்டு செல்வது, தொலைக்காட்சி படங்களை உருவாக்குவது போன்றவை பெரிய லாபங்களை தந்து விடாது என்பதால் ராஜ் டிவியின் எதிர்கால வளர்ச்சி குறித்து சில சந்தேகங்கள் எழுகின்றன.
பங்குச்சந்தை தளத்தின் கருத்து
இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் பல பங்குகள் அதிக அளவில் லாபத்தை பெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் ராஜ் டிவி பங்குகளில் முதலீடு செய்வது பெரிய லாபத்தை கொடுக்காது. வேறு நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாம்.