தமிழில் பங்குச்சந்தை

பங்குச்சந்தை செய்திகள், அலசல்கள், வாய்ப்புகள், உயர்வு, சரிவு….

Inflation control : Fuels to cost less

Posted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 15, 2007

பெட்ரோல், டீசல் விலை குறைவு

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசு முறையே ரூ2 மற்றும் ரூ1 ஆக குறைத்துள்ளது. இதையடுத்து பெட்ரோலின் விலை சென்னையில் 47.51ரூபாயாகவும், டீசலின் விலை 33.22 ரூபாயாகவும் இருக்கும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் HPCL, BPCL போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் பங்குச்சந்தையில் இந்தப் பங்குகள் சரிந்தன.

தொடர்ந்து உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பணவீக்கம் இந்த வாரம் 6.73% எட்டியது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயருவது பங்குச்சந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் நேற்று பங்குச்சந்தை 346 புள்ளிகள் உயர்ந்தது. உலக அளவில் பல்வேறு பங்குச்சந்தைகள் உயர்ந்த சூழலில் இந்தியப் பங்குசந்தைகளும் உயர்ந்தன.

Advertisements

Posted in பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள், Indian Markets, Stock Market | 1 Comment »

பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் தீவிரவாதிகள்

Posted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 15, 2007

தீவிரவாத இயக்கங்களுக்கு பங்குச்சந்தை மூலம் பணம் கிடைப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக மும்பை மற்றும் சென்னை பங்குச்சந்தையில் இவர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் நாராயணன் கூறியிருக்கிறார்.

மும்பை பங்குச்சந்தையை குறிப்பிடும் அதே நேரத்தில், சென்னை பங்குச்சந்தையை நாராயணன் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பங்குச்சந்தையில் அதிக அளவு வர்த்தகம் நடப்பதில்லை. சென்னை பங்குச்சந்தையை நாராயணன் குறிப்பிட்டுள்ளது விடுதலைப் புலிகளை குறித்து தான் இருக்க முடியும் என்று தெரிகிறது. விடுதலைப் புலிகள் பல நிறுவனங்களை நடத்துவதாகவும், அதில் பங்குச்சந்தை வர்த்தகமும் ஒன்று என நாராயணன் கூறியுள்ளார்

விடுதலைப் புலிகளின் இந்த முறையை ஜிகாதி இயக்கங்களும் கடைபிடிக்க தொடங்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

எம்.கே.நாராயணன் விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | 2 Comments »

வட்டி விகிதம் உயர்வு

Posted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 15, 2007

ரிசர்வ் வங்கி CRRஐ உயர்த்தியவுடன் வங்கிகளும் தங்கள் வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கி உள்ளன. பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் தேசிய வங்கி போன்ற வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன

http://www.thehindubusinessline.com/2007/02/15/stories/2007021506590100.htm

Posted in வணிகச்செய்திகள் | 2 Comments »

பணவீக்கம் பங்குச்சந்தையை பாதிக்கும்

Posted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 14, 2007

பணவீக்கம் பங்குச்சந்தையை பாதிக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு வட்டி விகிதங்களை உயர்த்த தொடங்கி இருக்கிறது. இதனால் வங்கி சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு கடன்பத்திரங்களைச் சார்ந்த (Debt Instruments) முதலீடுகள் அதிக பலனை கொடுக்ககூடும். இதனால் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் சற்றே குறைந்து இத்தகைய கடன்பத்திரங்களை நோக்கி நகரும். இது சந்தைக்கு சரிவை ஏற்படுத்தக் கூடும்

Posted in பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | Leave a Comment »

வங்கிப் பங்குகள் கடும் சரிவு

Posted by பங்குச்சந்தை மேல் பிப்ரவரி 14, 2007

வங்கிப் பங்குகள் இன்று சந்தையில் கடுமையாக சரிந்தன. ரிசர்வ் வங்கி வங்கிகளின் Cash Reserve Ratio (CRR)வை 0.5% அதிகரித்துள்ளதால், பங்குச்சந்தையில் வங்கிப்பங்குகள் கடுமையாக சரிந்தன. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வங்கிகள் தங்கள் கைவசம் அதிக நிதி வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் வங்கிகளிடம் 14,000 கோடி ரூபாய் தேங்கி விடும். இது வங்களின் நிதி வரவை பாதிக்கும் என்பதால் பங்குச்சந்தையில் அதன் எதிரொலி காணப்பட்டது

Posted in பங்குச்சந்தை செய்தி, வணிகச்செய்திகள் | Leave a Comment »